ஐரோப்பிய நாடுகள் லீக்: குரேஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!

ஐரோப்பிய நாடுகள் மோதும், ஐரோப்பிய நாடுகள் லீக் கால்பந்து தொடரின் குரூப் போட்டிகளில், குரேஷியாவுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி, கடைசி நிமிடத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
 | 

ஐரோப்பிய நாடுகள் லீக்: குரேஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!

ஐரோப்பிய நாடுகள் மோதும், ஐரோப்பிய நாடுகள் லீக் கால்பந்து தொடரின் குரூப் போட்டிகளில், குரேஷியாவுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி, கடைசி நிமிடத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு முதல் முதலாக துவக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் லீக் தொடரின் குரூப் போட்டிகளில், குரூப் டி-யை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதின. தங்களுடைய கடைசி குரூப் போட்டி இது என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.

லண்டன் வெம்பிலி மைதானத்தில், தங்கள் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து மின்னல் வேகத்தில் அட்டாக் செய்த இங்கிலாந்து வீரர்கள், பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதை கோலுக்குள் தள்ள முடியாமல் இங்கிலாந்து வீணடித்தது.

முக்கியமாக ஸ்டெர்லிங், ஹேரி கேன் ஆகிய இரு வீரர்களும் கடைசிவரை குரேஷியாவுக்கு நெருக்கடி கொடுத்து கொண்டே இருந்தனர். முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது இங்கிலாந்து. ஆனால், எதிர்பாராத விதமாக, குரேஷியாவின் க்ராமரிச், 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். இங்கிலாந்து வீரர்களை தனது ஜாலத்தால் திணறடித்து, அதிரடி கோல் அடித்து அவர் குரேஷியாவுக்கு முன்னிலை கொடுத்தார்.

அதன்பின் விடாமுயற்சி செய்து வந்தது இங்கிலாந்து அணி. 78வது நிமிடத்தில், இங்கிலாந்தின் லிங்கார்டு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அதன்பின், இங்கிலாந்து தனது அட்டாக்கை அதிகப்படுத்தியது. 85வது நிமிடத்தின் போது, இங்கிலாந்துக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி, டெலி ஆலி அடித்த பந்தை, நட்சத்திர வீரர் கேன் கோலுக்குள் தள்ளி முன்னிலை கொடுத்தார். போட்டி 2-1 என முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லீக்கின் குரூப் டி-யில் முதலிடத்தை இங்கிலாந்து பிடித்தது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் பிளே ஆப் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP