1. Home
  2. விளையாட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: பேல் அசத்தல்; ரியல் மார்டிட் ஹேட்ட்ரிக் வெற்றி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: பேல் அசத்தல்; ரியல் மார்டிட் ஹேட்ட்ரிக் வெற்றி!


ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில், லிவர்பூலுடன் மோதிய ரியல் மாட்ரிட், 3-1 என வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

உலகக் கோப்பைக்கு அடுத்து, உலகின் மிகப்பெரிய கால்பந்து தொடராக கருதப்படும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி, உக்ரைனின் கியவ்வில் நடைபெற்றது. போட்டி துவங்கியது முதல் இரு அணிகளும் அசத்தலாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கினர்.

இந்த சீஸனில் 44 கோல்கள் அடித்த லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான சாலா, போட்டியின் 30வது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேறினார். மாட்ரிட்டின் ராமோஸ், சாலாவின் கையை பிடித்து இழுத்து அவர் மேல் விழுந்தார். இதில், சாலாவின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலா வெளியேறியது முதல் மாட்ரிட் முழு ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில், 50வது நிமிடத்தின் போது, லிவர்பூல் கோல்கீப்பர் காரியஸ், பந்தை ரியல் மாட்ரிட் வீரர் பென்சீமா காலில் தவறுதலாக போட, அதில் அவர் கோல் அடித்து, மாட்ரிட்டுக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் சில நிமிடங்களிலேயே, ஒரு கார்னர் கிக் வாய்ப்பில், லிவர்பூலின் சாடியோ மானே கோல் அடித்தார். போட்டி சமமாக இருந்தது.

60வது நிமிடத்தில், மாட்ரிட் வீரர் காரெத் பேல் களமிறக்கப்பட்டார். போட்டியில் அவர் இறங்கி 3வது நிமிடத்திலேயே, ஒரு சூப்பர் பாஸ் கிடைக்க, அதை 'பைசைக்கிள்' கிக் அடித்து கோலுக்குள் தாக்கினார். 82வது நிமிடத்தின் போது, பேல் மீண்டும் கோல் அடித்தார். இந்தமுறை, சுமார் 50 அடி தூரத்தில் இருந்து பந்தை ராக்கெட் போல பேல் விளாச, அது லிவர்பூல் கோல் கீப்பர் செய்த மற்றொரு தவறால் கோலானது. 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

இது ரியல் மாட்ரிட் தொடர்ந்து வெல்லும் 3வது சாம்பியன்ஸ் கோப்பையும், 2014, 2016, 2017, 2018 என 5 வருடங்களில் அந்த அணி பெறும் 4வது கோப்பையுமாகும்.

newstm.in

Trending News

Latest News

You May Like