யூரோப்பா லீக் கால்பந்து: ஆர்சனல் த்ரில் வெற்றி

பிரபல இங்கிலாந்து கால்பந்து க்ளப் அணியான ஆர்சனல், நேற்று நடந்த யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒஸ்டர்சண்ட்ஸ் அணியை நாக் அவுட் செய்து, ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது.
 | 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் முதல் போட்டியில், ஆர்சனல் அணி 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று ஆர்சனல் அணியின் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்தது. 

முதல் போட்டியில் மோசமாக தோற்றிருந்ததால், கத்துக்குட்டி அணியான ஒஸ்டர்சண்ட்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என கருதப்பட்டது. ஆனால், 20 நிமிடங்கள் ஆன போது, மளமளவென இரண்டு கோல்கள் அடித்து ஆர்சனல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஒஸ்டர்சண்ட்ஸ். ஹோசம் அயேஷ், மற்றும் கென் சீமா கோல் அடித்தனர். இன்னும் ஒரு கோல் அடித்தால் போட்டியை சமன் செய்து விடலாம் என்ற முனைப்பில் ஒஸ்டர்சண்ட்ஸ் விளையாடியது.

ஆனால், இரண்டாவது பாதியை அதிரடியாக துவக்கிய ஆர்சனல் அணியின் கோலசினியாக் சில நிமிடங்களிலேயே கோல் அடித்தார். அதன்பின், 2 கோல்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஒஸ்டர்சண்ட்ஸ் விளையாடியது. ஆனால்,  அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. போட்டி 1-2 என முடிந்தது. இரண்டு போட்டிகளையும் சேர்த்து 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஆர்சனல், ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP