யூரோப்பா லீக் கால்பந்து: ஆர்சனல் சூப்பர் வெற்றி!

ஐரோப்பிய நாடுகளின் க்ளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது பெரிய கால்பந்து கோப்பையான யூரோப்பா லீக் தொடரில், இங்கிலாந்தின் ஆர்சனல் அணியுடன், இத்தாலியின் ஏ.சி.மிலான் மோதியது.
 | 

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் ஆர்சனல், சிறப்பாக விளையாடி வரும் ஏ.சி.மிலானுடன் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிரடியாக விளையாடி, 2-0 என ஆர்சனல் வெற்றி பெற்றது. மிலான் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆரம்பம் முதல் ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் பாதியின் 15வது நிமிடத்தில், ஆர்சனல் அணியின் மிக்கிடாரியன் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடது பக்கம் பந்தை எடுத்து வந்த அவர், இரண்டு வீரர்களை தாண்டி ஷாட் அடித்தார். பந்து மிலான் அணி வீரரின் மீது பட்டு கோல் போஸ்டுக்குள் திரும்பியது. பின்னர் முதல் பாதி முடியும் நேரத்தில், ஆர்சனலின் ராம்ஸே கோல் கீப்பரை தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோல் அடித்தார். போட்டி 2-0 என முடிந்தது. 

இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் அடுத்த போட்டி, லண்டனில் உள்ள ஆர்சனலின் எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மிலான் அணி குறைந்தபட்சம் 2 கோல்களாவது அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP