இங்கிலாந்து பிரீமியர் லீக்: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து பிரீமியர் லீக்: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி
 | 

இங்கிலாந்து பிரீமியர் லீக்: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து பிரீமியர் லீக்: ஆர்சனல் அதிர்ச்சி தோல்வி

நேற்று நடைபெற்ற பிரபல இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில், முன்னணி அணியான ஆர்சனல் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதே நேரம், லிவர்பூல் சூப்பர் வெற்றி பெற்றது.

ஸ்வான்சி அணியுடன் மோதிய ஆர்சனல், 3-1 என தோற்றது. துவக்கம் முதலே  ஆதிக்கம் செலுத்தி விளையாடியது ஸ்வான்சி. ஆனால், 33வது நிமிடத்தில் ஒசில் கொடுத்த பாசில், மான்ரியல் கோலடிக்க, ஆர்சனல் முன்னிலை பெற்றது. சிறிது நேரம் கூட வீணாக்காமல், ஸ்வான்சி அணியின் க்ளூகஸ் 34வது நிமிடத்திலேயே கோல் அடித்து சமன் செய்தார். அதன்பின் 61வது நிமிடத்தில், ஆர்சனல் அணியின் கோல்கீப்பர் செக், பந்தை ஸ்வான்சி அணியின் ஜார்டான் ஆயூ-விடம் தவறுதலாக பாஸ் செய்ய, அவர் எளிதாக கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 86வது நிமிடத்தில் க்ளூகஸ் மீண்டும் கோல் அடிக்க, போட்டி 3-1 என முடிந்தது.

ஹட்டர்ஸ்ஃபீல்டு அணியுடன் மோதிய லிவர்பூல், 3-0 என்ற கோல் கணக்கில் சூப்பர் வெற்றி பெற்றது. எம்ரே சான், ஃபிர்மீனோ, முஹம்மது சாலா ஆகியோர் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம், லீக் பட்டியலில் 24 போட்டிகளில் 50 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது லிவர்பூல். ஆர்சனல் 6வது இடத்தில் உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP