பனாமாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து!

உலகக் கோப்பை குருப் டியில் கத்துக்குட்டி நாடான பனாமாவுடன் மோதிய இங்கிலாந்து, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ஹேரி கேன் ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தார்.
 | 

பனாமாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து!

உலகக் கோப்பை குருப் டியில் கத்துக்குட்டி நாடான பனாமாவுடன் மோதிய இங்கிலாந்து, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ஹேரி கேன் ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தார். 

குரூப் டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளோடு, கத்துக்குட்டி அணிகள் துனிசியா மற்றும் பனாமா விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் துனிசியாவை இங்கிலாந்து வீழ்த்திய நிலையில், பெல்ஜியம், பனாமாவையும் துனிசியாவையும் இரண்டு போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. 

நேற்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து பனாமாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குகளுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது. 

ஆரம்பம் முதல் இங்கிலாந்தின் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் பனாமா திணறி வந்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜான் ஸ்டோன்ஸ் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து, 22வது நிமிடத்தில், இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், கேப்டன் ஹேரி கேன் கோல் அடித்தார்.

36வது நிமிடத்தில், இளம் வீரர் லிங்கார்ட், 25அடி தூரத்தில் இருந்து சூப்பர் கோல் அடித்தார். 40வது நிமிடத்தில் கிடைத்த ஒரு ப்ரீ கிக் வாய்ப்பில்,  ஸ்டோன்ஸ் மீண்டும் தலையால் முட்டி கோல் அடித்தார். முதல் பாதி முடியும் முன், இங்கிலாந்துக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், ஹேரி கேன் தனது இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி 5-0 என முடிந்தது. 

இரண்டாவது பாதியில், 62வது நிமிடத்தின் போது, இங்கிலாந்தின் டயர் அடித்த பந்து, கேன் கால்களில் பட்டு கோலுக்குள் சென்றது. போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த போது,  78வது நிமிடத்தில், பனமாவின் பிலிப்பெ பலோய் ஆறுதல் கோல் அடித்தார். 6-1 என இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, புள்ளி பட்டியலில் முதலிடம் சென்றுள்ளது. 

துனிசியா மற்றும் பனாமா அணிகள், குரூப் போட்டிகளிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP