1. Home
  2. விளையாட்டு

உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா

உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா

உலகக் கோப்பை காலிறுதி சுற்றின் கடைசி போட்டிகளில், ஸ்வீடனை இங்கிலாந்து 2-0 என்று வீழ்த்த, ரஷ்யாவை பெனால்டி ஷூட் மூலம் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது குரேஷியா.

இந்த உலகக் கோப்பையில், பெரும்பாலான பெரிய அணிகள் எதிர்ப்பாராத விதமாக தோற்று தங்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வெளியேறியுள்ளன. மீதமிருக்கும் அனைத்து அணிகளும் ஐரோப்பிய கண்டதை சேர்ந்தவை என்பதால், உலகக் கோப்பை தற்போது, ஐரோப்பிய கோப்பையாக மாறியுள்ளது. இதுவரை பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேற்று இங்கிலாந்து - ஸ்வீடன், மற்றும் குரேஷியா - ரஷ்யா அணிகள் மோதின.

தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய இந்த போட்டி, முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. 30வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், அந்த அணியின் ஹேரி மகுவையர், கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், 58வது நிமிடத்தில், டெலி ஆலி கோல் அடித்தார். போட்டி 2-0 என முடிந்தது.

உலகக் கோப்பையை நடத்தும் ரஷ்யாவுடன் குரேஷியா மோதியது. மைதானம் முழுக்க ரஷ்யா ரசிகர்கள் கூடியிருந்தனர். பலமான குரேஷியா அணி, ரஷ்யாவுக்கு இடமே கொடுக்காமல் அசத்தலாக விளையாடியது. ஆனால், 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செரிஷேவ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், குரேஷியா 39வது நிமிடத்தில், க்ராமாரிச் வழியாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. அதன் பின் யாரும் கோல் அடிக்காமல் 90 நிமிடங்கள் முடிந்தது. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், குரேஷியா முதலில் கோல் அடித்தது. ஆனால், ஆட்டம் முடியும் வேளையில் ரஷ்யா மீண்டும் கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. பின்னர் பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. அதில், குரேஷியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like