டிபாய் அதிரடி; ஜெர்மனியை வீழ்த்தியது நெதர்லாந்து!

ஜெர்மனி, நெதர்லாந்து இடையே நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பையில், மெம்ஃபிஸ் டிபாய்யின் அதிரடியில் 3-0 என வெற்றி பெற்றது நெதர்லாந்து.
 | 

டிபாய் அதிரடி; ஜெர்மனியை வீழ்த்தியது நெதர்லாந்து!

ஜெர்மனி, நெதர்லாந்து  இடையே நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பையில், மெம்ஃபிஸ் டிபாய்யின் அதிரடியில் 3-0 என வெற்றி பெற்றது நெதர்லாந்து. 

ஐரோப்பிய கால்பந்து ஆணையம் நடத்தி வரும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நெதர்லாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. உலகக் கோப்பை முதல் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஜெர்மனி அணி, முதல் போட்டியில் பிரான்சிடம் டிரா செய்திருந்தது. இந்த போட்டியில் நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது ஜெர்மனி. நெதர்லாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் மெம்ஃபிஸ் டிபாய், ஜெர்மனி வீரர்களை படாத பாடு படுத்தினார். 

தொடர்ந்து பல வாய்ப்புகளை டிபாய் உருவாக்கினார். 30வது நிமிடத்தின் போது, டிபாய் அடித்த கார்னர் கிக் ஷாட்டை வேன் டைக் தலையால் முட்டி கோல் அடித்தார். அதன் பின் நெதர்லாந்து பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்த கோல் வாய்ப்புகள் வீணாகின. கடைசியாக 86வது நிமிடத்தின் போது, டிபாய் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 90+3வது நிமிடத்தில் வைனால்டம் கோல் அடிக்க, போட்டி 3-0 என முடிந்தது. இந்த முடிவால் ஜெர்மனி அணி கோப்பையில் இருந்து நாக் அவுட் செய்யப்படும் நிலையில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP