குவிந்த ரசிகர்கள்; சுனில் சேத்ரி இரட்டை கோல்; இந்தியா அபார வெற்றி!

மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் குவிந்திருக்க, கென்யாவுக்கு எதிராக நடைபெற்ற இன்டர்கான்டினென்டல் போட்டியில், இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது.
 | 

4 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில் கென்யாவுக்கு எதிராக இந்தியா மோதியது. முதல் போட்டியின் போது மைதானம் காலியாக இருந்ததை தொடர்ந்து, இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கை வைத்தார். இதனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். முதல் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடிய கென்யா, இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுத்தது. 

இரண்டாவது பாதியில், 68வது நிமிடத்தின் போது, கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். பின்னர், ஜெஜெ கோல் அடிக்க இந்தியா 2-0 என முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்தது. ஆட்டம் முடியும் கடைசி நிமிடங்களில், சேத்ரியிடம் பந்து கிடைக்க, தனியே அதை எடுத்துச் சென்று, கோல் கீப்பர் தலைக்கு மேல் பந்தை தூக்கி அடித்து 3-0 என போட்டியை முடித்தார்.

"ரசிகர்கள் போட்டியை பார்க்க வந்தது மிக்க மகிழ்ச்சி. இதுபோல எல்லா போட்டிகளுக்கும் வந்து உற்சாகப்படுத்தினால், நாங்கள் உயிரை கொடுத்து விளையாடுவோம்" என்றார் சேத்ரி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP