சேத்ரி மீண்டும் மேஜிக்: இன்டர்காண்டினெண்டல் கோப்பையை வென்றது இந்தியா!

இந்தியாவில் நடைபெற்ற 4 கண்டங்களின் நாடுகள் மோதும் இன்டர்காண்டினெண்டல் தொடரின் இறுதி போட்டியில், சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடித்து அசத்த, கென்யாவை இந்தியா 2-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
 | 

கென்யா, நியூஸிலாந்து, சீன தாய்பேய் அணிகள் மோதும், இன்டர்காண்டினெண்டல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பையின் பயிற்சியாக கருதப்படும் இந்த தொடரில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி கோல்களை குவித்து வந்தது. சீன தாய்பேயை வீழ்த்தி இறுதி போட்டியில் ஏற்கனவே தகுதி பெற்றிருந்த இந்தியாவுடன் மோதியது கென்யா.

துவக்கம் முதல் அசத்தலாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, 7வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். பின், 28வது நிமிடத்தில், மீண்டும் கோல் அடித்து 2-0 என இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP