ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டியில் சென்னை!

இன்று நடந்த ஐ.எஸ்.எல் அரையிறுதி போட்டியில், சென்னையின் எஃப்.சி, கோவாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 | 

ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டியில் சென்னை!

ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டியில் சென்னை!

இன்று நடந்த ஐ.எஸ்.எல் அரையிறுதி போட்டியில், சென்னையின் எஃப்.சி, கோவாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரு தினங்களுக்கு முன் நடந்த அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் சென்னை 1-1 என கோவாவுடன் டிரா செய்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தாலே இறுதி போட்டிக்கு செல்லலாம் என்ற நிலையில் சென்னை களமிறங்கியது. 

26வது நிமிடத்தில் சென்னையின் நட்சத்திர வீரர் ஜேஜே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, தன்பால் கணேஷ் மற்றொரு கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது சென்னை. 

ஆட்டம் முடியும் வரை பெரிய கோல் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தது கோவா. இறுதியில், 90வது நிமிடத்தில் ஜேஜே மீண்டும் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதி போட்டியில், சென்னை - பெங்களூரு அணிகள் வரும் சனிக்கிழமை மோதுகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP