செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் படுதோல்வி; கோப்பையை நோக்கி சிட்டி

செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் படுதோல்வி; கோப்பையை நோக்கி சிட்டி
 | 

செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் படுதோல்வி; கோப்பையை நோக்கி சிட்டி

செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் படுதோல்வி; கோப்பையை நோக்கி சிட்டி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில், நேற்று முன்னணி அணிகளான செல்சி மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் தோல்வியடைந்தன. 

போர்ன்மௌத் அணியுடன் லண்டனில் தனது ஸ்டாம்பார்டு பிரிட்ஜ் மைதானத்தில் செல்சி மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போனது. ஆனால், இரண்டாவது பாதியில், 51வது நிமிடத்தில் போர்ன்மௌத் அணியின் கேலம் வில்சன் கோலடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய போர்ன்மௌத் அணியின் ஸ்டானிஸ்லாஸ் 64வது நிமிடத்தில் கோலடிக்க சில நிமிடங்களில் நேதன் அக்கே கோல் அடித்தார். இறுதியில் போர்ன்மௌத் 3-0 என்ற வெற்றி பெற்று செல்சி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

லண்டனை சேர்ந்த டாட்டன்ஹேம் அணியுடன் மான்செஸ்டர் யுனைட்டட் அணி மோதியது. போட்டி துவங்கிய சில வினாடிகளில் டாட்டன்ஹேம் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். அதன் பின்னர், 26வது நிமிடத்தில் யுனைட்டட் அணியின் பில் ஜோன்ஸ் தவறுதலாக தனது அணிக்கு எதிராகவே ஓன் கோல் போட்டார். இறுதியில் 2-0 என டாட்டன்ஹேம் வெற்றி பெற்றது.

வெஸ்ட் ப்ராம் அணியுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டி அணி, 3-0 என வெற்றி பெற்றது. பெர்னான்டினோ, டி ப்ருய்ன், அகுவேரோ ஆகியோர் கோல் அடித்தனர். 

தற்போது பிரீமியர் லீக் பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைட்டட் 53 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3-0 என கடுமையாக தோற்றதால் செல்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP