மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தி எஃப்.ஏ கோப்பையை வென்றது செல்சி!

இங்கிலாந்தின் எஃப்.ஏ கால்பந்து கோப்பையின் இறுதி போட்டியில், மான்செஸ்டர் யுனைட்டட்டை 1-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது செல்சி.
 | 

மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தி எஃப்.ஏ கோப்பையை வென்றது செல்சி!

மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தி எஃப்.ஏ கோப்பையை வென்றது செல்சி!

இங்கிலாந்தின் எஃப்.ஏ கால்பந்து கோப்பையின் இறுதி போட்டியில், மான்செஸ்டர் யுனைட்டட்டை 1-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது செல்சி.

செல்சி அணியின் பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டேவின் தலைமையில் அந்த அணி விளையாடும் கடைசி போட்டி இதுதான் என கூறப்பட்டு வரும் நிலையில், போட்டியின் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. 

இரு அணிகளும் சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில், 21வது நிமிடத்தில், செல்சியின் நட்சத்திர வீரர் ஈடென் ஹசார்ட் அசத்தலாக பந்தை வாங்கி, கோல் அடிக்க முயற்சித்து மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பெனால்டி பாக்ஸுக்குள் நுழைந்தார். அப்போது, யுனைட்டட்டின் தடுப்பு ஆட்டக்காரர் பில் ஜோன்ஸ் பவுல் செய்து ஹசார்டை தடுத்தார். இதனால், செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை ஹசார்டே கோலாக்கினார். 

1-0 என முன்னிலை பெற்று செல்சி இரண்டாம் பாதியை தொடங்கியது. யுனைட்டட் வீரர்கள் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஆனால், அதை செல்சியின் கோல்கீப்பர் கோர்ட்டுவா தடுத்தார். இறுதியில் போட்டி 1-0 என முடிந்தது.  எஃப்.ஏ கோப்பையை செல்சி 8வது முறையாக வென்றது.

வெற்றி கோப்பையுடன் பயிற்சியாளர் கான்டே வெளியேறவுள்ளார் என பல தரப்பில் கூறப்படுகிறது. செல்சி வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் கான்டேவுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், அவர் இந்த அடுத்த சீசன் வேறு அணியை நோக்கி நகருவார் என்கின்றனர் கால்பந்து உலகில். ஆனால், இதுவரை அவர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP