சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பாயர்ன் தடுமாற்றம்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா - லியோன், லிவர்பூல் - பாயர்ன் ஆகிய அணிகள் மோதிய இரண்டு முக்கிய போட்டிகளுமே கோல் எதுவுமே இல்லாமல் டிரா ஆகின.
 | 

சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பாயர்ன் தடுமாற்றம்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா - லியோன், லிவர்பூல் - பாயர்ன் ஆகிய அணிகள் மோதிய இரண்டு முக்கிய போட்டிகளுமே கோல் எதுவுமே இல்லாமல் டிரா ஆகின.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லியோன் அணியை எதிர்கொண்டது. மெஸ்ஸி, டெம்பிலே, சுவாரஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும், பார்சிலோனா அணி கோல் அடிக்க, முடியாமல் திணறியது. பல்வேறு வாய்ப்புகளை பார்சிலோனா உருவாக்க, லியோன் அணியும் அவ்வப்போது நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், கடைசி வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இந்த போட்டியை பார்சிலோனா எளிதாக வெல்லும் என பலர் எதிர்பார்த்த நிலையில், கோல் எதுவுமே அடிக்காமல் முதல் போட்டி முடிந்துள்ளது, ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

மற்றொரு போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல் மற்றும் ஜெர்மனியின் பாயர்ன் முனிச் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியிலும், இரு அணிகளுமே பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் டிபென்ஸ் மற்றும் கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால், கோல் எதுவும் இல்லாமல் டிரா ஆகின.

இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த நாக்அவுட் சுற்றில், அடுத்த போட்டி மார்ச் மாதம் 13ம் தேதி, பார்சிலோனாவிலும், முனிச்சிலும் நடைபெறுகின்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP