1. Home
  2. விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது பாரிஸ்

சாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது பாரிஸ்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மான்செஸ்டர் யுனைட்டட், பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிகள் மோதிய முக்கிய போட்டியில், பாரிஸ் அணி 2-0 என அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் சிறந்த அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுகள் நேற்று முதல் துவங்கியது. இதில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் அணியுடன் மோதியது. காயம் காரணமாக நெய்மார், கவானி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் கடும் பின்னடைவை சந்தித்தது பாரிஸ். அதேநேரம், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, தொடர் வெற்றிகளை மான்செஸ்டர் அணி குவித்து வந்த நிலையில், இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆரம்பத்திலிருந்தே பாரிஸ் அணி, முழுவதும் தாக்கி விளையாடியது. மான்செஸ்டர் யுனைட்டட் பதிலுக்கு ஒருசில வாய்ப்புகளை உருவாக்கி நெருக்கடி கொடுத்தது. ஆனால் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி முடிந்தது. இரண்டாவது பாதியில், ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தபோது, பாரிஸ் அணியின் கிம்பெம்பே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், நட்சத்திர வீரர் ம்பாப்பே, மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.

போட்டி முடியும் நேரத்தில், மான்செஸ்டரின் நட்சத்திர வீரர போஃபா, பவுல் செய்ததால் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். பாரிஸ் 2-0 என வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த சுற்றின் அடுத்த போட்டி, அடுத்த மாதம் 2ம் தேதி பாரிஸில் நடைபெறுகிறது. அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 3 கோல்கள் வித்தியாசத்தில் பாரிஸை வீழ்த்தினால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ரெட் கார்டு வங்கியுள்ளதால், நட்சத்திர வீரர போஃபா அதில் விளையாட மாட்டார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like