சாம்பியன்ஸ் கோப்பை: லிவர்பூல் த்ரில் வெற்றி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில், பலம்வாய்ந்த லிவர்பூல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிகள் மோதிய போட்டியில் கடைசி நிமிட கோல் அடித்து லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது.
 | 

சாம்பியன்ஸ் கோப்பை: லிவர்பூல் த்ரில் வெற்றி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில், பலம்வாய்ந்த லிவர்பூல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிகள் மோதிய போட்டியில் கடைசி நிமிட கோல் அடித்து லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது. 

கடந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி வரை சென்ற லிவர்பூல், ரியல் மாட்ரிட் அணியிடம் தோற்றது. இந்தமுறைநிச்சயம் கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் லிவர்பூல் நேற்று தனது முதல் போட்டியில், பிரென்ச் சாம்பியன்களான பி.எஸ்.ஜி அணியுடன் மோதியது. காயத்தில் இருந்து குணமாகி வரும் பிர்மீனோ ஆட்ட லெவனில் சேர்க்கப்படவில்லை.

போட்டி துவங்கியது முதல் லிவர்பூல் அதிரடி காட்டியது. சானே, சாலா, ஸ்டர்ரிட்ஜ் ஆகியோரின் அதிரடி அட்டாக்கில் பிஎஸ்ஜி தடுமாறியது. பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க திணறியது லிவர்பூல். ஆனால், 30வது நிமிடத்தில், ராபர்ட்சன் அளித்த பாசை, ஸ்டர்ரிட்ஜ் தலையால் முட்டி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், சில நிமிடங்களில், லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், மில்னர் கோல் அடித்தார். முதல் பாதி 2-0 என முடியும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், தாமஸ் மியுனிர் கோல் அடித்து முதல் பாதியை 2-1 என முடித்தார். 

இரண்டாவது பாதியிலும் லிவர்பூல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. பி.எஸ்.ஜி அணி வீரர்கள் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறினர். ஆனால், 83வது நிமிடத்தில் சாலா செய்த சிறிய தவறை பயன்படுத்தி, ம்பாப்பே கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 2-2 என டிராவாக போட்டி முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்று வீரராக வந்த பிர்மீனோ, 90+3வது நிமிடத்தில் சூப்பர் கோல் அடித்து லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தார். 

நேற்று நடந்த மற்றொரு போட்டியில், இத்தாலிய அணியான இன்டர் மிலானுடன் மோதிய  டாட்டன்ஹேம் 1-1 என போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP