சாம்பியன்ஸ் கோப்பை: நாக் அவுட்டானது மான்செஸ்டர் யுனைட்டட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றில், பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட், செவில்லாவுடன் தோற்று நாக் அவுட்டானது.
 | 

சாம்பியன்ஸ் கோப்பை: நாக் அவுட்டானது மான்செஸ்டர் யுனைட்டட்

சாம்பியன்ஸ் கோப்பை: நாக் அவுட்டானது மான்செஸ்டர் யுனைட்டட்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றில், பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட், செவில்லாவிடம் தோற்று நாக் அவுட்டானது. 

உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக, சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மான்செஸ்டர் யுனைட்டட் அணி, ஸ்பெயின் நாட்டின் செவில்லாவுடன் மோதியது. 

இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்தச் சுற்றின் முதல் போட்டி, கோல் எதுவும் இல்லாமல் 0-0 என டிரா ஆனது. அதனால், இந்த இரண்டாவது போட்டியில், ஒரு கோலாவது அடித்து டிரா செய்தால் போதும் என்ற நிலையில் செவில்லாவும், செவில்லாவை வீழ்த்தினால் தான் காலிறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் யுனைட்டட் அணியும் விளையாடின. இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. 

ஆனால், இரண்டாவது பாதியில் 74வது மற்றும் 78வது நிமிடங்களில் செவில்லா அணி வீரர் பென் எட்டர் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய யுனைட்டடால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட்டை, செவில்லா 2-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP