'மெஸ்ஸி ஜெர்ஸியை தீ வைத்து எரியுங்கள்: கொந்தளிக்கும் பாலஸ்தீனம்!

இஸ்ரேலுக்கு கால்பந்து விளையாட மெஸ்ஸி வந்தால், அவரது பெயர் பொறித்த சட்டைகளை ரசிகர்கள் தீ வைத்து எரிக்க வேண்டும், என பாலஸ்தீன கால்பந்து கழக தலைவர் கூறியுள்ளார்.
 | 

'மெஸ்ஸி ஜெர்ஸியை தீ வைத்து எரியுங்கள்: கொந்தளிக்கும் பாலஸ்தீனம்!

இஸ்ரேலுக்கு கால்பந்து விளையாட மெஸ்ஸி வந்தால், அவரது பெயர் பொறித்த சட்டைகளை ரசிகர்கள் தீ வைத்து எரிக்க வேண்டும், என பாலஸ்தீன கால்பந்து கழக தலைவர் கூறியுள்ளார். 

உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் சர்வதேச பயிற்சி போட்டியில், அர்ஜென்டினா, இஸ்ரேலுடன் இந்த வாரம் மோதுகிறது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் கலந்து கொள்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே ஜெருசலேம் மீதான சர்ச்சை உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த போட்டி ஜெருசலேமில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது பாலஸ்தீனவர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. முன்னதாக ஹைஃபா என்ற இஸ்ரேலிய நகரில் இந்த போட்டி நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் போட்டியை ஜெருசலேமிற்கு மாற்ற வலியுறுத்தி, அதற்கான செலவையும் ஏற்பதாக கூறினர். தற்போது ஜெருசலேமிற்கு போட்டி மாற்றப்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

கால்பந்தில் மிகப்பெரிய நட்சத்திரமான மெஸ்ஸிக்கு லட்சக்கணக்கான பாலஸ்தீன ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், பாலஸ்தீன கால்பந்து கழகத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜோப், அர்ஜென்டினா இந்த போட்டியில் விளையாடக் கூடாது. முக்கியமாக மெஸ்ஸி விளையாடக் கூடாது என கூறியுள்ளார். ஜெருசலேமை உரிமை கொண்டாடும் இஸ்ரேலை ஆதரிப்பது பாலஸ்தீனத்தை அவமதிப்பது போன்ற செயலாகும். "சாதாரண கால்பந்து போட்டியை இஸ்ரேல் அரசியலாக்குகிறது. இதை இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நாங்கள் மெஸ்ஸி மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் அவரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து போராடப் போகிறோம். மெஸ்ஸியின் ஜெர்சிகளை தீ வைத்து எரித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம். அவர் இந்த போட்டியில் விளையாட ஜெருசலேம் வரக் கூடாது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP