நெய்மரை போன்று தரையில் புரண்டு நடித்த சிறுவர்கள்!

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் போல சிறுவர்கள் மைதானத்தில் விழுந்து புரண்டு நடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

நெய்மரை போன்று தரையில் புரண்டு நடித்த சிறுவர்கள்!

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் போல சிறுவர்கள் மைதானத்தில் விழுந்து புரண்டு நடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர். மைதானத்தில் இவரது சிறப்பான ஆட்டத்தை போலவே மற்றொரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அவர் சிறு அடிக்கே மைதானத்தில் உருண்டு புரண்டு நடிக்கிறார் என்பது பல கால்பந்து ரசிகர்களின் கருத்து. ஆனால் அவருக்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர். தன் மீதான விமர்சனங்கள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை என்று நெய்மர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பிரேசில் விளையாடிய நான்கு போட்டிகளில் 43 முறை நெய்மர் தரையில் விழுந்து புரண்டுள்ளார். அவர் தரையிலேயே மொத்தமாக 13.50 நிமிடங்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றன ஆங்கில ஊடகங்கள். 

நெய்மரை போன்று தரையில் புரண்டு நடித்த சிறுவர்கள்!

இந்நிலையில் நெய்மரை கலாய்த்து வெளியாகும் மீம்ஸ்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்து கால்பந்து அணியின் சிறுவர்கள் நெய்மர் போல தரையில் விழுந்து புரண்டு நடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனை வெளியிட்டுள்ள சுவிட்சர்லாந்து சாக்கர் கிளப் அதில், "நெய்மர் உடற்பயிற்சி" என்று பதிவிட்டுள்ளது.

இதே போல பிரபல உணவகமான கேஃஎப்சி தனது புதிய விளம்பரத்தில் நெய்மரை கலாய்த்துள்ளது. அதில் ஒரு கால்பந்து வீரர் விளையாட்டின் நடுவில் கீழே விழுகிறார். ஆனால் தரையில் இருந்து எழாமல் உருண்டுக்கொண்டே மைதானத்தில் இருந்து வெளியே செல்கிறார். நீண்ட தூரம் உருண்டு அவர் கேஃஎப்சி கடைக்கு செல்வது போல அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பலரும்  #NeymarRolling என பரப்பி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP