உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

பெரும் எதிர்பார்ப்புடன் உலகக் கோப்பை துவங்கியுள்ளது. தீவிர கால்பந்து ரசிகனால் கூட இப்படி ஒரு துவக்கத்தை எதிர்பார்த்திருக்க முடியாது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா என எல்லா அணிகளுக்கும் எதிரணிகள் பாடம் கற்றுக் கொடுத்தன.
 | 

உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

பெரும் எதிர்பார்ப்புடன் உலகக் கோப்பை துவங்கியுள்ளது. தீவிர கால்பந்து ரசிகனால் கூட இப்படி ஒரு துவக்கத்தை எதிர்பார்த்திருக்க முடியாது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா என எல்லா அணிகளுக்கும் எதிரணிகள் பாடம் கற்றுக் கொடுத்தன. 

ஸ்பெயின் 1 - 1 போர்ச்சுகல்

உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

குரூப் போட்டிகளிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்டது போர்ச்சுகல் - ஸ்பெயின் போட்டி தான். முன்னாள் உலக சாம்பியன் அணியான ஸ்பெயினை, தற்போதய ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் எதிர்கொண்டது. பயிற்சியாளரை இழந்து குழப்பத்தில் இருந்த சர்ச்சையில் இருந்து மீளாத ஸ்பெயின், போர்ச்சுகலின் தடுப்பு அரணை தாண்ட முடியாமல் தவித்தது. கடந்த 20 சர்வதேச போட்டிகளில் நாம் பார்க்காத ஸ்பெயின் இது. வழக்கம் போல வீரர்களால் பல கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. போர்ச்சுகலின் ரொனால்டோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்து தனது அணிக்கு பக்க பலமாக இருந்தார். அதே நேரம், ஸ்பெயினை, டியேகோ கோஸ்டா தனது இரண்டு கோல்களால் காப்பாற்றினார். போர்ச்சுகலை ஸ்பெயின் எளிதாக வென்றுவிடும் என நினைத்தவர்களுக்கு போர்ச்சுகல் ஒரு பாடம் கற்பித்து கொடுத்துள்ளது.

பிரேசில் 1 - 1 ஸ்விட்சர்லாந்து

உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

தென் அமெரிக்க குவாலிஃபையர் போட்டிகளில் தொடர் வெற்றிகள் அதிரடி கோல்கள் என முதல் அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது பிரேசில். நெய்மார், குட்டினோ, ஜீசஸ், வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களின் சாகசங்களை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், சர்வதேச தரவரிசை பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து, பிரேசில் அணியை படாத பாடு படுத்தியது. நெய்மார், வில்லியன் போன்றோரின் சாகசங்கள் வீணாகின. குட்டினோ தனது அதிரடியால், ஒரு சூப்பர் கோல் அடிக்க, அதை காரனர் கிக் மூலம் உடனே சமன் செய்தது ஸ்விஸ் அணி. கடைசி வரை  பிரேசிலால் மற்றொரு கோல் அடிக்க முடியவில்லை.

அர்ஜென்டினா 1 - 1 ஐஸ்லாந்து

உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

வெறும் 3.3 லட்சம் மக்கள் கொண்ட ஐஸ்லாந்து, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. பலம்வாய்ந்த எதிரணிகளை, கோல் அடிக்க விடாமல் டிபன்ட் செய்வதை தங்களது அடையாளமாக ஆக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஐஸ்லாந்து வீரரும் கடைசி நிமிடம் வரை தங்களது உயிரை கொடுத்து விளையாடுகிறார்கள். ஆனால், ஐஸ்லாந்தை குறைத்து மதிப்பிட்ட அர்ஜென்டினா, முழுக்க முழுக்க மெஸ்ஸியை நம்பியே இருந்தது. ஆனால், மெஸ்ஸியை கட்டம் கட்டி போட்டியை விட்டு தூக்கியது ஐஸ்லாந்து. இதை மீறியும் மெஸ்ஸி உருவாக்கிய பல வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. முதல் பாதியில் அர்ஜென்டினாவின் அகுவேரா அடித்த கோலை, ஐஸ்லாந்தின் பின்போகாசன் சமன் செய்தார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அர்ஜென்டினா. 

ஜெர்மனி 0 - 1 மெக்சிகோ

உலகக் கோப்பை முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள்!

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோவுடன் மோதிய போட்டி தான் இந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய ஷாக். எப்போதுமே, தனது குரூப்பில் இரண்டாவது இடத்தில் முடிக்கும் மெக்சிகோ அணி, இந்த முறை, முதலிடத்தில் முடிக்க வாய்ப்புள்ளது. ஜெர்மனியை வீழ்த்துவது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. அந்த அணியின் பலவீனங்களை புரிந்து கொண்டு, சிறப்பாக பிளான் செய்து செயல்பட்டது மெக்சிகோ அணி. 35வது நிமிடத்தில் மெக்சிகோவின் மின்னல் வேக அட்டாக்கின் இறுதியில், ஹிர்விங் லொசானோ கோல் அடிக்க, ஜெர்மனி பதிலடி கொடுக்க முடியாமல் வீழ்ந்தது. 

பலம்வாய்ந்த பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை 2-1 என வீழ்த்தியது. ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி, கடைசி நிமிடம் வரை பிரான்ஸ் ரசிகர்களை நகம் கடிக்க வைத்தனர். 

முதல் சுற்றிலேயே பெரிய அணிகளுக்கு சிறிய அணிகள் பாடம் கற்றுக் கொடுத்திருப்பது, இந்த உலகக் கோப்பையின் பலத்தை காட்டியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP