1. Home
  2. விளையாட்டு

இங்கிலாந்துக்கு நெத்தியடி.. சாதனை படைத்தது பெல்ஜியம்


உலகக் கோப்பை போட்டியில் 3ம் இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பெல்ஜியம் அணி.

2018 உலகக் கோப்பையின் முடிவு இன்று தெரிந்துவிடும். இறுதி போட்டியில், பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோதவுள்ள நிலையில், நேற்று 3ம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் இதில் மோதின.

இரண்டு அணிகளிலுமே பல இளம் வீரர்கள் இந்த உலகக் கோப்பையை கலக்கி வருவதால், போட்டியில் யார் வெற்றி பெறுவார் என கணிக்க முடியாத நிலை இருந்தது. மேலும், உலகக் கோப்பையின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் ஹேரி கேன் மற்றும் பெல்ஜியத்தின் லுக்காக்கு உள்ளனர். இந்த போட்டியில் கோல் அடிக்கும் வீரர் நிச்சயம் கோல்டன் பூட் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு அணிகளுமே ஆரம்பம் முதல் அட்டாக் செய்து விறுவிறுப்பாக விளையாடின. போட்டியின் 5வது நிமிடத்திலேயே, பெல்ஜியம் அணியின் சாட்லி கொடுத்த பாஸை கோலுக்குள் தள்ளி முன்னிலை கொடுத்தார் தாமஸ் மியோனிர். தொடர்ந்து பெல்ஜியம் அட்டாக் செய்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது. இங்கிலாந்து அணி பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் கோல் அடிக்க முடியவில்லை. முக்கியமாக ஹேரி கேன் அடித்த ஷாட்டை, பெல்ஜியம் கோல் கீப்பர் சுபசிச் பாய்ந்து தடுத்தார். இங்கிலாந்தின் டயர் பல வாய்ப்புகளை மிஸ் செய்தது பின்னடைவை அளித்தது.

தொடர்ந்து பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தி வர, 81வது நிமிடத்தில் நட்சத்திர வீரர்கள் ஹஸார்டு மற்றும் டி ப்ரூயின் சேர்ந்து இரண்டாவது கோலை கொடுத்தனர். இங்கிலாந்து டிபென்சை தாண்டி டி ப்ரூயின் கொடுத்த பாஸை, ஹஸார்டு கோலாக்கினார். இங்கிலாந்தால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. 2-0 என வெற்றி பெற்று, தங்களது உலகக் கோப்பை வரலாற்றிலேயே சிறந்த இடமாக, 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது பெல்ஜியம்.

newstm.in

Trending News

Latest News

You May Like