பிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்!

2018 உலகக் கோப்பையின் மிகப்பெரிய ஷாக்-களுள் ஒன்றாக, இளம் ஐரோப்பிய அணியான பெல்ஜியம், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசிலை வீழ்த்தி நாக் அவுட் செய்தது.
 | 

பிரேசிலை வீட்டுக்கு அனுப்பியது பெல்ஜியம்!

2018 உலகக் கோப்பையின் மிகப்பெரிய ஷாக்-களுள் ஒன்றாக, இளம் ஐரோப்பிய அணியான பெல்ஜியம், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசிலை வீழ்த்தி நாக் அவுட் செய்தது. 

ரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையின் பல போட்டிகளில் யாருமே எதிர்பார்க்காத முடிவுகள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள நாடுகளாக பார்க்கப்பட்ட ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய அணிகள் தொடரில் இருந்து சீக்கிரமே நாக் அவுட் செய்யப்பட்டன. தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக உருகுவேயை பிரான்ஸ் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், பலம்வாய்ந்த பிரேசில், பெல்ஜியம் அணியுடன் மோதியது.

நெய்மார், குட்டினோ உள்ளிட்ட வீரர்கள் பிரேசில் அணிக்காக இந்தமுறை மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல, ஹசார்டு, லுக்காகு , டி ப்ருயின் போன்ற இளம் வீரர்களை கொண்டுள்ள பெல்ஜியம், இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பிரேசில் அணி வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து அட்டாக் செய்து வந்த பிரேசில் வீரர்கள் அடித்த ஒரு கார்னர் கிக், கோல் போஸ்ட்டில் பட்டு நூலிழையில் வெளியடியேறியது. பிரேசில் தான் முதல் கோல் அடிக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், 13வது நிமிடம் பெல்ஜியத்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது.அந்த அணியின் சாட்லி அடித்த அந்த பந்து, பிரேசில் வீரர் பெர்னாண்டினோ தலையில் பட்டு ஓன் கோலாக உள்ளே சென்றது. பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. 

புதிய தன்னம்பிக்கையுடன் விளையாடிய பெல்ஜியம், 31வது நிமிடம் மீண்டும் அட்டாக் செய்தது. அப்போது நட்சத்திர வீரர் கெவின் டி ப்ருயின், தூரத்தில் இருந்து அடித்த ஷாட், கோல் கீப்பரை தாண்டி உள்ளே சென்றது. பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில் பிரேசில் தொடர்ந்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. 76வது நிமிடம், அந்த அணியின் குட்டினோ கொடுத்த பாஸை, அகுஸ்டோ தலையால் முட்டி கோலாக்கினார். போட்டியை சமன் செய்ய பிரேசில் கடும் முயற்சி எடுத்தாலும், ஆவேசமாக டிபெண்ட் செய்த பெல்ஜியத்தை தாண்டி மீண்டும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என பிரேசிலை நாக் அவுட் செய்தது பெல்ஜியம். அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் அணியுடன் பெல்ஜியம் மோதுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP