1. Home
  2. விளையாட்டு

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா - வலென்சியா!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா - வலென்சியா!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி பார்சிலோனா தகுதி பெற்ற நிலையில், மற்றொரு இடத்திற்கு பலம்வாய்ந்த வலென்சியா அணி முன்னேறியுள்ளது.

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய போட்டியில், பார்சிலோனா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிச் சுற்றுக்கான மற்றொரு இடத்திற்கு, வலென்சியா மற்றும் ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில், இரு அணிகளும் 2-2 என டிரா செய்திருந்தனர். பெட்டிஸ் அணியின் மைதானத்தில் 2 கோல்களை வாலன்சியா அடித்திருந்ததால், 'அவே கோல்' விதிப்படி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு வலென்சியாவால் தகுதி பெற முடியும்.

இந்த நிலையில், வலென்சியாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், வலென்சியா அணி நிறுவப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டங்களுக்கு இடையே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிக்கு அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர். சிறப்பாக விளையாடிய வலென்சியா அணி, பெட்டிஸ் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விளையாடியது. எப்போதுமே அதிரடியாக விளையாடும் பெட்டிஸ் அணியால், பல வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. 56வது நிமிடத்தில், வலென்சியாவின் ரோட்ரிகோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரு அணிகளும் அதன்பிறகு கோல் அடிக்காததால், போட்டி 1-0 என முடிந்தது. இரண்டு போட்டிகளையும் சேர்த்து, 3-2 என வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது வலென்சியா.

இறுதிப்போட்டியில், வலென்சியா - பார்சிலோனா அணிகள் வரும் மே மாதம் 25ம் தேதி மோதுகின்றன.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like