பார்சிலோனா அதிர்ச்சி தோல்வி; அரையிறுதியில் ரோமா, லிவர்பூல்

நேற்று நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகளில், பார்சிலோனா 3-0 என அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. மற்றொரு போட்டியில் லிவர்பூல் மான்செஸ்டர் சிட்டி அணியை 2-1 என வீழ்த்தியது.
 | 

பார்சிலோனா அதிர்ச்சி தோல்வி; அரையிறுதியில் ரோமா, லிவர்பூல்

பார்சிலோனா அதிர்ச்சி தோல்வி; அரையிறுதியில் ரோமா, லிவர்பூல்

நேற்று நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகளில், பார்சிலோனா 3-0 என அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. மற்றொரு போட்டியில் லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணியை 2-1 என வீழ்த்தியது.

இரண்டு போட்டிகளாக நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை நாக் அவுட் சுற்றுகளின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த முதல் போட்டியில் இத்தாலியின் ரோமா அணியுடன் மோதிய பார்சிலோனா, 4-1 என வென்றிருந்தது. இரண்டாவது போட்டியில் 3 கோல்கள் அடித்தால் மட்டுமே பார்சிலோனாவை வீழ்த்த முடியும் என்ற கடினமான சூழ்நிலையில் களமிறங்கியது ரோமா. போட்டி துவங்கிய 5வது நிமிடத்திலேயே, ரோமாவின் ஜெக்கோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, டி ராசி கோல் அடித்தார். பின்னர் 82வது நிமிடத்தில், ரோமாவின் மனோலாஸ் கோல் அடித்து 3-0 என வெற்றி பெற உதவினார். நட்சத்திர வீரர்களை கொண்ட பார்சிலோனா அணி, ஒரு கோல் கூட அடிக்காமல் வெளியேறியது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

மற்றொரு போட்டியில், 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது மான்செஸ்டர் சிட்டி. 2வது நிமிடத்திலேயே சிட்டியின் ஜீசஸ், கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், லிவர்பூலின் நட்சத்திர வீரர் சாலா, 56வது நிமிடத்தில் கோல் அடித்து, சிட்டியின் கனவை தகர்த்தார். ஃபிர்மினோ 77வது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டி 2-1 என முடிந்தது.

இதனால் தங்கள் சரித்திரத்திலேயே முதன்முறையாக ரோமாவும், மற்றும் 10 வருடங்களுக்கு பின்னர் லிவர்பூலும் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP