சுவாரஸ் அதிரடியால், ரியல் மாட்ரிட்டை நாக் அவுட் செய்தது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், பார்சிலோனா அணியின் சுவாரஸ் அட்டகாசமாக விளையாடி இரண்டு கோல்கள் அடிக்க, ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா
 | 

சுவாரஸ் அதிரடியால், ரியல் மாட்ரிட்டை நாக் அவுட் செய்தது பார்சிலோனா!

ஸ்பானிஷ்  கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், பார்சிலோனா அணியின் சுவாரஸ் அட்டகாசமாக விளையாடி இரண்டு கோல்கள் அடிக்க, ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா.

உலகின் மிகப்பெரிய கால்பந்து க்ளப் அணிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையே நடைபெறும் எல் கிளாசிகோ போட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகும். கோடிக்கணக்கானோர் பார்க்கும் இந்த இரு அணிகளும், இந்த ஒரு மாத இடைவெளியில், 3 முறை ஒருவரோடு ஒருவர் மோதுகின்றன. ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் மோதின. கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற முதல் போட்டியில், ரியல் மாட்ரிட் 1-1 என டிரா செய்திருந்தது. 

வெற்றியாளரை தேர்வு செய்யும் இரண்டாவது போட்டி மாட்ரிட்டில் நேற்று நடைபெற்றது. பார்சிலோனா மைதானத்தில் மாட்ரிட் ஒரு கோல் அடித்திருந்ததால், அந்த அணி அவே கோல் விதியின் படி முன்னிலை பெற்றிருந்தது. இந்த போட்டியில் கோல் இல்லாமல் டிரா செய்தாலே மாட்ரிட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் நிலை. பார்சிலோனாவோ, குறைந்தபட்சம் ஒரு கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

ஆரம்பம் முதலே ரியல் மாட்ரிட் அதிரடி காட்டி விளையாடியது. பல வாய்ப்புகளை அந்த அணியினர் உருவாக்கி பார்சிலோனாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், நூலிழையில் கோல் வாய்ப்புகள் தவற விடப்பட்டன. முக்கியமாக மாட்ரிட்டின் இளம் வீரர் வினீசியஸ் ஜூனியர், பார்சிலோனா டிபேன்ஸ் வீரர்களை திணறவிட்டார். முதல் பாதியில், பார்சிலோனா கோல் வாய்ப்புகளே கிடைக்காமல் போராடி வந்தது. 

இரண்டாவது பாதியில், 50வது நிமிடத்தில், பார்சிலோனாவின் சுவாரஸ் மற்றும் டெம்பெலே சிறப்பாக பந்தை கடத்திச் செல்ல, சுவாரஸ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, டெம்பெலே மீண்டும் சிறப்பாக செயல்பட்டு பந்தை பாஸ் செய்ய, அது மாட்ரிட் வீரர் வரானே கால்களில் பட்டு கோலுக்குள் சென்றது. பின்னர், மாட்ரிட் வீரர் ராமோஸ், சுவாரஸை பெனால்டி பாக்ஸுக்குள் பவுல் செய்யப்பட, பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், சுவாரஸ் அசத்தலாக பந்தை சிப் செய்து கோல் அடித்தார். 3-0 என பார்சிலோனா வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

அடுத்ததாக, ஸ்பானிஷ் லீக் தொடரின் முக்கிய போட்டியில், பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள், வரும் 3ம் தேதி மோதுகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP