1. Home
  2. விளையாட்டு

மீண்டும் அசத்திய குட்டினோ; பிரேசில் 2-0 வெற்றி!


பிரேசில் மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது குரூப் போட்டியில், பிரேசில் 2-0 என வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த உலகக் கோப்பையின் குரூப்- இ-யில் உள்ள பிரேசில், ஸ்விட்சர்லாந்து, செர்பியா மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் முறையே 4 இடங்களில் இருந்தன. குரூப் பின் டாப் இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்பதை முடிவெடுக்கும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

பிரேசில் - செர்பியா ஒரு போட்டியிலும், ஸ்விஸ் - கோஸ்டா ரிக்கா மற்றொரு போட்டியலும் மோதின. கோஸ்டா ரிக்கா ஏற்கனவே வெளியேறிவிட்டதால், முதல் இடத்தை பிடிக்க மற்ற 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. பிரேசிலுக்கு ஈடுகொடுத்து சிறப்பாக விளையாடியது செர்பியா. பிரேசிலின் நெய்மார், குட்டினோ ஜோடி அட்டாக் செய்யும் போது, செர்பியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். அதேநேரம், திடமாக டிபெண்ட் செய்த செர்பியா, ஆரம்பகட்டத்தில் பிரேசிலை கோல் அடிக்கவிடவில்லை.

36வது நிமிடத்தின் போது, குட்டினோ, ஒரு சூப்பர் பாஸ் செய்ய, அதை பாலினோ தனது கால் நுனியால் கோலுக்குள் தள்ளினார். பிரேசில் 1-0 என் முன்னிலை பெற்றது. இதுவரை நடைபெற்ற இரண்டும் போட்டிகளிலுமே, குட்டினோ தனது தனிப்பட்ட திறமையால், எதிரணிகளை ஆட்டம் காண வைத்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி 1-0 என முடிந்தது. இரண்டாவது பாதியில் 68வது நிமிடத்தின் போது, ஒரு கார்னர் கிக் வாய்ப்பில் நெய்மார் பாஸ் கொடுக்க, அதை பிரேசிலின் தியாகோ சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். 2-0 என அபார வெற்றி பெற்று, குரூப் இ-யில் முதலிடம் பிடித்தது பிரேசில்.

ஸ்விட்சர்லாந்து - கோஸ்டா ரிக்கா மோதிய போட்டி, 2-2 என டிரா ஆனது. 7 புள்ளிகளுடன் பிரேசில் முதலிடத்தையும் , 5 புள்ளிகளுடன் ஸ்விட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

நாக் அவுட் சுற்றின் முதல் போட்டியில் பிரேசில் மெக்சிகோவுடனும், ஸ்விட்சர்லாந்து ஸ்வீடனுடம் மோதுகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like