ரியல் மாட்ரிட்டுடன் 1-1 என டிரா செய்தது அட்லெட்டிகோ மாட்ரிட்

நேற்று நடந்த ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட்டுடன் 1-1 என டிரா செய்தது அட்லெடிகோ மாட்ரிட்.
 | 

ஸ்பெயின் நாட்டின் பிரபல லா லிகா கால்பந்து போட்டியின் முக்கிய ஆட்டத்தில், ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும், அட்லெடிகோவுடன் 3வது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. 

இரண்டு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினாலும், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதியில் 53வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அட்லெடிகோ அணியின் கிரீஸ்மேன் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இரு அணிகளும் அதன்பின் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், போட்டி 1-1 என்ற நிலையிலேயே முடிந்தது. 

இன்று நடந்த போட்டியில் 4வது இடத்தில் உள்ள வலென்சியா வென்றதால், 3வது இடத்திற்கு முன்னேறி, ரியல் மாட்ரிட்டை 4வது இடத்திற்கு தள்ளியது. 31போட்டிகள் முடிந்துள்ள நிலையில், பார்சிலோனா 79 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அட்லெடிகோ 68 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP