அர்ஜென்டினா vs பிரான்ஸ் - ஜெயிக்கப்போவது யாரு?

2018 உலகக் கோப்பையின் குரூப் போட்டிகள் அத்தனையும் முடிந்து இன்று முதல் நாக் அவுட் சுற்றுகள் துவங்குகின்றன. முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 16-ல், பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியோடு, அர்ஜென்டினா விளையாடுகிறது.
 | 

அர்ஜென்டினா vs பிரான்ஸ் - ஜெயிக்கப்போவது யாரு?

2018 உலகக் கோப்பையின் குரூப் போட்டிகள் அத்தனையும் முடிந்து இன்று முதல் நாக் அவுட் சுற்றுகள் துவங்குகின்றன. முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 16-ல், பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியோடு, அர்ஜென்டினா விளையாடுகிறது. 

இந்த உலகக் கோப்பையை வெல்லும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தது பிரான்ஸ் அணியை தான். அட்டாக், மிட்பீல்டு, டிபென்ஸ், கோல் கீப்பர் என அனைத்து இடங்களிலும் நட்சத்திர வீரர்கள் படையையே கொண்டுள்ளது பிரான்ஸ். தகுதிச் சுற்றுகளில் அதிரடியாக விளையாடி எதிரணிகளை பிரான்ஸ் துவம்சம் செய்து மேலும் எதிர்பார்ப்பை கூட்டியது.  

டிபென்ஸில், வாரானே, உம்டிட்டி ஜோடி மைய புள்ளியாக அமைந்துள்ளனர். பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் இந்த இரு வீரர்களும், உலகின் மிக சிறந்த டிபெண்டர்களாக கருதப்படுகின்றனர். வலது பக்க டிபெண்டராக புதிதாக வந்துள்ள பெஞ்சமின் பவார்டு, இந்த உலகக் கோப்பையில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். 

மிட்பீல்டில், ங்கொலோ காண்டே மற்றும் போஃபா சிறப்பான பார்மில் உள்ளனர். அதிக வேகமாகும், சிறந்த டெக்னிக்கும் கொண்ட இந்த இரண்டு வீரர்கள் கையிலும், மெஸ்ஸியை கட்டுப்படுத்தும் பொறுப்பு வந்து சேரும். குறைந்த கால கட்டத்திலேயே, பிரான்ஸ் அணியின் இன்றியமையாத வீரராகிவிட்டார் காண்டே. எந்த இடத்தில் இருந்தும் கோல் அடிக்கும் திறன் கொண்ட போஃபா, எதிரணியை கதிகலங்க செய்யும் திறமை கொண்டவர். 

பிரான்ஸின் முக்கியமான அம்சமே அவர்களது அட்டாக் தான். டெம்பேலே, கிரீஸ்மேன், ம்பாப்பே ஆகிய மூவரும் தங்களது வாழ்வின் சிறந்த பார்மில் உள்ளனர். கிரீஸ்மேன் மற்றும் ம்பாப்பே தங்களது கோல் கணக்கை துவக்கிவிட்டனர். இளம் வீரர் டெம்பேலேவிடம் பந்து கிடைக்கும் போதெல்லாம், இரண்டு எதிரணி வீரர்களை தாண்டிச் சென்று கோல் வாய்ப்பை உருவாக்குகிறார். 

ஆனால், இவ்வளவு வீரர்கள் இருந்தாலும், அதிக கோல்கள் அடிக்க முடியவில்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி பிரான்ஸ் இன்னும் உருவெடுக்கவில்லை. ஆனால், நாக் அவுட் சுற்றில், பவர்புல்லான பிரான்ஸ் அணியை பார்க்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 

 

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, இந்தமுறை ரசிகர்களை கடுமையாக ஏமாற்றியுள்ளது. உலகின் மிக சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்ஸியை கொண்டுள்ள அர்ஜென்டினாவில் மேலும் பல உலகத்தரம் வாய்ந்த அட்டாக் வீரர்கள் உள்ளனர் . அகுவேரோ, டி மரியா, ஹிகுவேயின், டிபாலா போன்ற வீரர்களை கண்டால், எந்த அணியின் டிபென்சும் நடுநடுங்கும். 

ஆனால், அட்டாக்கில் எவ்வளவு திறமை இருந்தாலும், அர்ஜென்டினாவின் டிபென்ஸ் மற்றும் மிட்பீல்டின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 34 வயதான மாஸ்கெரானோவை நம்பி அந்நாட்டின் மிட்பீல்டு இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே. உலகக் கோப்பை துவங்கும் சில நாட்களுக்கு முன், அர்ஜென்டினாவின் லான்சினி காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதில் கொண்டு வரப்பட்ட என்சொ பெரஸ், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

முழுக்க முழுக்க மெஸ்ஸியை நம்பி அந்த அணியின் அட்டாக் உள்ளது. கோல் அடிக்கும் திறமை மட்டுமல்லாமல் பாஸ் செய்வதிலும் வல்லவரான மெஸ்ஸி, முதல் இரண்டு போட்டிகளில் எல்லா வேலையையும் தானே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொடரில் இருந்து அர்ஜென்டினா வெளியேற இருந்த நிலையில், கடைசி போட்டியில், அணியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மெஸ்ஸி சுதந்திரமாக விளையாட துவங்கினார். அந்த போட்டியில் அசத்தலான கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றி பெற உதவினார் மெஸ்ஸி. 

பிரான்ஸுக்கு எதிராக அர்ஜென்டினாவின் அட்டாக்குகளை வடிவமைக்கப் போகும் வீரர், எவர் பனேகா. முதல் இரண்டு போட்டிகளிலும் பயிற்சியாளர் இவரை தேர்ந்தெடுக்கவில்லை. கடும் விமர்சனங்களுக்கு பிறகு 3வது போட்டியில், பனேகா சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியில் முக்கிய பங்கும் வகித்தார். அதனால் அவர் இல்லாமல் அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்துவது நடக்காத காரியம் என்றே சொல்லலாம். கடந்த போட்டியில் விளையாடிய கோல் கீப்பர் அர்மானி, பிரான்சுக்கு  எதிரான போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சிறப்பாக விளையாடி வரும் பிரான்ஸ், மெஸ்ஸியை கட்டுப்படுத்தி, அர்ஜென்டினாவின் மிட்பீல்டு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தால், வெற்றி வாய்ப்பு அதிகம். மோசமான பார்மில் உள்ள அர்ஜென்டினா, முதல் இரண்டு போட்டிகள் போல அல்லாமல், வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 90 நிமிடமும் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். பிரான்ஸின் அட்டாக் வீரர்களுக்கு ஒரு சில வினாடிகள் இடம் கொடுத்தால் கூட, பந்தாடி விடுவார்கள். முழுக்க முழுக்க அட்டாக் வீரர்கள் ஜொலிப்பதற்கு ஏற்ற அனைத்து தகுதிகளும் இந்த போட்டிக்கு உள்ளது. 

பட்டாசா இருக்கும்... மிஸ் பண்ணாதீங்க மக்களே...!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP