போராட்டங்களை தொடர்ந்து அர்ஜென்டினா - இஸ்ரேல் கால்பந்து போட்டி ரத்து

உலகக் கோப்பைக்கு முன், அர்ஜென்டினா மற்றும் இஸ்ரேல் அணிகள் விளையாடவிருந்த பயிற்சி கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

போராட்டங்களை தொடர்ந்து அர்ஜென்டினா - இஸ்ரேல் கால்பந்து போட்டி ரத்து

உலகக் கோப்பைக்கு முன், அர்ஜென்டினா மற்றும் இஸ்ரேல் அணிகள் விளையாடவிருந்த பயிற்சி கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு போட்டிகளில் விளையாட இருந்த அர்ஜென்டினா, முதல் போட்டியில் ஹெய்தியை 4-0 என வீழ்த்தியது. 2வது போட்டி இஸ்ரேலின் ஹைபா நகரில் நடைபெற இருந்தது. ஆனால்,  அதை மாற்ற இஸ்ரேல் முடிவு செய்தது. ஜெருசலேமில் போட்டியை நடத்தவும், அதற்காக ஆகும் கூடுதல் சேவை தாங்களே எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். ஜெருசலேமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்க தூதரகத்தை ட்ரம்ப் ஜெருசலேமிற்கு மாற்ற உத்தரவிட்டார். இது பாலஸ்தீனர்களிடையே பெரும் கோபத்தை கிளப்பியது. 

இந்நிலையில், கால்பந்து போட்டியை ஜெருசலேமிற்கு மாற்றி இஸ்ரேல் அரசியல் செய்வதாக பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவர் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கான பாலஸ்தீன ரசிகர்களை கொண்ட அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஜெருசலேம் சென்று விளையாடக் கூடாது என அவர் வலியுறுத்தினார். மீறி விளையாடினால், மெஸ்ஸியின் டி ஷர்ட்டுகளை அவரது ரசிகர்கள் தீ வைத்து எரிக்க வேண்டும் என கூறினார். விஷயம் பூதாகரமானதை தொடர்ந்து, ஜெருசலேமில் நடைபெற இருந்த கால்பந்து போட்டியை ரத்து செய்ய அர்ஜென்டினா முடிவெடுத்துள்ளதாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP