ஐ.எஸ்.எல். கால்பந்து:  பெங்களூரு-கோவா இன்று இறுதிப்போட்டியில் மோதல் !

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி. மற்றும் எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடி. 2-வது இடத்தைக் கைப்பற்றும் அணிக்கு ரூ.4 கோடி பரிசாக வழங்கப்படும்
 | 

ஐ.எஸ்.எல். கால்பந்து:  பெங்களூரு-கோவா இன்று இறுதிப்போட்டியில் மோதல் !

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி. மற்றும் எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி காரணமாக சில மாதங்கள் இடைவெளி விட்டு நடைபெற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

அரையிறுதிப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், மும்பையில் இன்று (டிச.17) இரவு நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.  இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தைக் கைப்பற்றும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படவுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP