1. Home
  2. விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி !

ஐ.எஸ்.எல். கால்பந்து: முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி !

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஐ.எஸ்.எல். எனும் 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா ஆகிய அணிகள் மோதின.

முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்திருந்தாலும், 90 நிமிடங்கள் வரை யாரும் கோல் போடவில்லை. இதனையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.

கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் இரு அணி வீரர்களும் தொடர்ந்து தீவிரமான விளையாடினர். 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக யெல்லோ கார்டு பெற்ற கோவா அணியின் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது.

ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி வாகை சூடிய பெங்களூரு அணிக்கு 8 கோடி ரூபாயும், 2-வது இடத்தைக் கைப்பற்றிய கோவா அணிக்கு 4 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதிக கோல் அடித்த கோவா அணி வீரரான பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like