4 கோல்கள் அடித்து அசத்திய அகுவேரோ!

4 கோல்கள் அடித்து அசத்திய ஆகுவேரோ!
 | 

4 கோல்கள் அடித்து அசத்திய அகுவேரோ!


இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, லெஸ்டர் சிட்டியுடன் மோதியது. 

போட்டி துவங்கிய 3வது நிமிடத்திலேயே, மான்செஸ்டர் சிட்டி அணியின் டி ப்ரூய்ன், சூப்பர் பாஸ் கொடுக்க, ஸ்டெர்லிங் அதை கோலாக்கினார். அதன்பின்னர், மான்செஸ்டர் அணி வீரர்கள் செய்த தவறால், லெஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் ஜேமி வார்ட்டி கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி 1-1 முடிந்தது. 

பின்னர் இரண்டாவது பாதி துவங்கிய 3வது நிமிடத்தில், மான்செஸ்டர் அணியின் அகுவேரோ கோல் அடித்து மீண்டும் தனது அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் அகுவேரோவை லெஸ்டர் அணியால் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து 4 கோல்கள் அடித்து மான்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், மான்செஸ்டர் சிட்டி அணி, 72 புள்ளிகளுடன் 16 புள்ளிகள் முன்னிலை பெற்று கோப்பையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 21 கோல்கள் அடித்துள்ள இங்கிலாந்து பிரீமியர் லீகில் அதிக கோலடித்த 2வது வீரர் அகுவேரோ ஆவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP