இந்தியாவில் 2020 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து !

அமெரிக்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஃபிஃபா கூட்டத்தில், 2020ஆம் ஆண்டிற்கான பதினேழு வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது
 | 

இந்தியாவில் 2020 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து !

பதினேழு வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிஃபா உறுதி செய்துள்ளது. 

அமெரிக்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஃபிஃபா கூட்டத்தில், 2020ஆம் ஆண்டிற்கான பதினேழு வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது 

இது குறித்து இந்திய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் ப்ரஃபூல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், 2020ஆம் ஆண்டிற்கான பதினேழு வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியா நடத்த அனுமதியளித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் எனவும், இப்போட்டி இந்தியாவில் கோலாகாமாக நடத்தப்படும் எனவும், இந்தப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக பங்கேற்கவுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார். 

மேலும், யு-17 மகளிர் அணி தீவிர  பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தெற்காசிய கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் இந்த அணி, கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் 6-0 என்ற கோல்கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தியுள்ளது எனவும் படேல் பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP