பொறுப்பான கேப்டனுக்கு கிடைத்துள்ள சிறப்பான கௌரவம்! 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த வீரராக, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் ஆறுதல் அளித்திருக்கும்.
 | 

பொறுப்பான கேப்டனுக்கு கிடைத்துள்ள சிறப்பான கௌரவம்! 

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு கடைசி நிமிடத்தில் கைநழுவி போய், துரதிருஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை அந்த அணி இழந்தது. இருப்பினும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த வீரராக,  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் ஆறுதல் அளித்திருக்கும்.

ரவுண்ட் -ராபின் சுற்று போட்டிகள், அரையிறுதி, இறுதி போட்டி என இத்தொடரில் மட்டும் அவர் மொத்தம் 578 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அடித்த இரண்டு சதங்களும் இதில் அடங்கும்.

இதன் மூலம், உலகக்கோப்பை தொடரின் நாயகன் விருதை பெறும் கேப்டன்கள் வரிசையில் வில்லியம்சன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னர், 1992 உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரர் விருதை, நியூசிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் மார்டீன் க்ரோ பெற்றுள்ளார்.

அத்துடன், நடந்து முடிந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் வரிசையில், வில்லியம்சன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP