வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்...ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடருமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுடான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறுமா?..ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடருமா?..வாங்க போட்டி குறித்து ஓர் அலசல்.
 | 

வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்...ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடருமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுடான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறுமா?..ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடருமா?...வாங்க போட்டி குறித்து ஓர் அலசல்.

ஆஸ்திரேலியா

நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், ரன்ரேட்டில் + 0-வில் தான் உள்ளது. அந்த அணியின் தொடக்க ஜோடியான  பின்ச், வார்னர் வெற்றிகரமான ஜோடியாக உள்ளது. இவர்களைத் தவிர, ஸ்மித், மேக்ஸ்வெல் நல்ல பார்மில் உள்ளனர். இதில், கவாஜா மட்டும் சில போட்டிகளில் சொதப்பிவிடுகிறார்.

சுழற்பந்துவீச்சில் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆஸ்திரேலிய அணியில் செயல்படவில்லை. ஆனால், வேகப்பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ் மிரட்டுகிறார்கள். இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வங்கதேசம் சிறப்பாக ஆடியதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடு செய்யவே கூடாது.

வங்கதேசம்

கடந்த போட்டியில் சேஸிங்கில் (300 ரன்களை கடந்து) வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய தெம்புடன் வங்கதேசம் உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வங்கதேச அணியில் சீனியர் வீரர்கள் சரியான நேரத்திற்கு பார்மிற்கு திரும்பியுள்ளனர். இதில், ஆல் ரவுண்டர் ஆன சாஹிப் அல் ஹசன் முரட்டு பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் அவரே முதலிடத்தில் உள்ளதே இதற்கு சாட்சி. பவுலிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார்.

சர்கார், தமிம் இக்பால், ரஹீம், தாஸ் ஆஸ்திரேலியா பவுலர்களை மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் மோர்டசா, ரஹ்மான், ஹசன் பந்துவீச்சில் ஆஸி., பேட்ஸ்மேன்களை மிரட்டவில்லை என்றாலும், கட்டுப்படுத்துவார்கள்.

ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகும். இதில், ரன்கள் அதிகளவில் குவிக்க வாய்ப்புள்ளது. இதனால், இப்போட்டி இரு அணி பவுலர்களுக்கும் சவாலாக அமையும்.

மழைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், முழு போட்டியும் நடக்கும் என நம்பலாம்.

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

 

newsmtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP