தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம் - சச்சின் டெண்டுல்கர்

தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம் -  சச்சின் டெண்டுல்கர்

"தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம்" என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் முதல் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அது வரை மிடில் பேட்ஸ்மேனாக இருந்து வந்த டெண்டுல்கர், கடந்த செப்டம்பர் 1994 ஆண்டு முதல் முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அத்தனை எளிதாக கிடைத்ததல்ல. அந்த வாய்பை பெற நான் பல பேரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. மேட்ச்சில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலையில், அணியின் ப்ளேயர்ஸ் வரிசையை யாரும் மாற்றியமைக்க விரும்ப மாட்டார்கள். நான் நன்றாக ஆடவில்லை எனில், நீங்கள் என்ன கூறினாலும் கேட்கிறேன் எனக் கூறியதன் காரணமாகவே எனக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது; ப்ளேயர்ஸின் ஆர்டர் மாற்றப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 49 பந்துகளுக்கு 82 ரன்கள் எடுத்தேன். நான் நன்றாக ஆடவில்லை என்றால் நடந்திருப்பது வேறாக இருந்திருக்கும். எனினும் நம்மீது நம்பிக்கை வைத்து பயப்படாமல் நாம் எடுக்கும் சில தீர்மானங்கள் தான் நாளை நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

இந்திய கிரிக்கெட்டிலிருந்து அவர் விடைபெற்ற போது, 100 சர்வதேச ஆட்டங்களில் 100 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP