தோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...!

தோனி, ரோகித் சர்மாவினால் தான் கோலி கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

தோனி, ரோகித்தால் தான் கோலி கேப்டன்ஷிப்பில்....கோலியை மீண்டும்...மீண்டும் சீண்டும் காம்பீர்...!

தோனி, ரோகித் சர்மாவினால் தான் கோலி கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கோலியின் பேட்டிங் சராசரி 50 ஆக உள்ளது. எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை இது.

2019 உலக்க்கோப்பையில் இந்திய அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றது, அதன் பிறகு வெஸ்ட் இண்டீசை வொயிட் வாஷ் செய்தது என கோலி தன்னுடைய கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கோலியின் கேப்டன்ஷிப்பை  தொடர்ந்து விமர்சித்து வரும் கவுதம் காம்பீர், தற்போது தோனி, ரோகித் சர்மாவினால் தான் கோலி கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

அகமதபாத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன்  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் உரையாடினார். அப்போது கோலியின் கேப்டன்ஷிப்பை பற்றியும் விமர்சித்து பேசினார்.

’கடந்த உலகக்கோப்பையில் கோலி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், கேப்டனாக அவர் செல்லவேண்டிய தூரம் இன்னும் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மிகவும் சிறப்பான கேப்டனாக இருக்கிறார், ஏனெனில் அவருக்கு ரோஹித் சர்மா கிடைத்துள்ளார். மேலும், அவருக்கு தோனி நீண்ட காலமாக இருந்தார். ​உங்களுக்கு ஆதரவான பிற வீரர்கள் இல்லாதபோது, ​​உங்களின் கேப்டன்சி கவனிக்கப்படுகின்றன’ என்றார் கவுதம் காம்பீர்.

தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியை வழி நடத்திய கோலி தோல்விகளை கொடுத்தாக சுட்டிக்காட்டி பேசிய காம்பீர், ’கேப்டன்ஷிப்பை பற்றி பேசும்போது, நான் நேர்மையாக பேசி வருகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா என்ன சாதித்துள்ளார் என்று பாருங்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி என்ன சாதித்துள்ளார் என்று பாருங்கள். அதை ஆர்.சி.பியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அனைவருக்கும் பார்க்க முடிவுகள் உள்ளன’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP