1. Home
  2. விளையாட்டு

 பகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி?

 பகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி?

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான வரலாற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக அறிமுகமாகலாம் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன்கள் வர்ணனை செய்யவுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தோனியும் வர்ணனை செய்யவுள்ளாராம்.

மூத்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான தோனி, தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளார். மேலும் 2019 உலகக் கோப்பை முடிந்ததிலிருந்து இந்தியாவுக்காக அவர் விளையாடவில்லை. அவரது எதிர்காலம் குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில், கடந்த மாதம் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 4ஆவது நாளில் தோனி இந்திய வீரர்களின் ஆடை அறையில் தோன்றினார். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதை, அணியினருடன் சேர்ந்து தோனி கொண்டாடினார். மேலும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் சந்தித்தார்.

இந்த நிலையில், பகல்- இரவு டெஸ்ட் போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் நிறுவனம், முதல் பகல்-இரவு டெஸ்டுக்கு பெரும் திட்டங்களைக் கொண்டு, வரலாற்று சந்திப்புக்கான பல நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவரையும் அழைக்க அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மற்றும் தோனி ஆகியோர் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அணிவகுத்து நிற்பார்கள். அப்போது, இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இருந்து பிடித்த தருணங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். தோனியும் விருந்தினர் பட்டியலில் உள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. அழைப்பு ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள பகல்-இரவு டெஸ்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like