1. Home
  2. விளையாட்டு

கிரிக்கெட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் தோனி: விராட் கோலி

கிரிக்கெட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் தோனி: விராட் கோலி

தோனி ஒரு சூப்பர் ஸ்டார் என்றும், அவரை போல கிரிக்கெட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் யாரும் இல்லை என்றும் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, "முன்னதாக தோனி கூறியது போல மெல்போர்ன் பேட் செய்ய எளிதான பிட்ச் அல்ல. ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். செட் ஆன இரண்டு பேட்ஸ்மென்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். கடைசியில் வேலையைத் திறம்பட முடித்தார்கள். சாஹல் மிக அழகாக பவுளிங் செய்தார். இந்தத் தொடர் அபாரமாக அமைந்தது, நீண்ட நாட்களாக இங்கு தான் இருக்கிறோம். டி20 தொடரைச் சமன் செய்தோம், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்றுள்ளோம்.

ஒரு அணியாக தோனி குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் ரன்களை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, ஏனெனில் ரன்கள் எடுத்தால்தான் அவரது ரிதம், நம்பிக்கையை மீண்டும் அவரால் பெற முடியும். குறிப்பாக அதிக சர்வதேசப் போட்டிகளை ஆடாத போது. அப்படிப்பார்க்கும் போது அவர் இங்கு வந்து 3 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றது, நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் அவர் இந்த பார்மை முன்னெடுத்துச் செல்வார் என்று தோன்றுகிறது. அவருக்கே ஒரு பேட்ஸ்மெனாக தன் ரிதம் மீண்டும் கிடைத்தது குறித்து நம்பிக்கையாக இருக்கிறது. அவர் ரன்கள் தொடர்ச்சியாக எடுக்கிறார் என்பது அணிக்கு மகிழ்ச்சி அதைவிடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே.

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். வெளியே என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், ஒரு தனிநபராக அவரைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியை விடவும் அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர் இல்லை என்றே கருதுகிறோம். ஆகவே அவருக்கான இடத்தை மக்கள் வழங்க வேண்டும், ஏனெனில் அவர் நாட்டிற்காக நிறைய பங்களித்துள்ளார். ஆகவே அவர் தன் ஆட்டம் குறித்து அவரே வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர் புத்திசாலி கிரிக்கெட்டர், என்ன தேவை என்பதை அவர் அறிந்தே வைத்துள்ளார். ஒரு அணியாக நாங்கள் ஒட்டுமொத்தமாக அவர் அணிக்காக செய்யும் பங்களிப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்" என்றார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like