மின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்

இளம் கிரிக்கெட் வீரர், மின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்ததாக கல்கத்தா கிரிக்கெட் கிளப் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 | 

மின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்

இளம் கிரிக்கெட் வீரர், மின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்ததாக கல்கத்தா கிரிக்கெட் அகாடமி செயலாளர் தெரிவித்துள்ளார். 

கல்கத்தா கிரிக்கெட் கிளப்பில் கடந்த மாதம், ஆல்-ரவுண்டர் டேபப்ரதா பால் என்னும் 21 வயதான கிரிக்கெட் வீரர் இணைந்தார். இவர் தனது வார்ம்-அப்பை முடித்துக் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தார். அப்போது மின்னலுடன் கூடிய இடி விழுந்தது. இதில் தாக்கப்பட்ட பால், சம்பவ இடத்தில் மயக்கமடைந்தார். 

இதனை தொடர்ந்து இதயத்தை இயக்க வைக்க முயன்றதில் ஒரு உணர்ச்சியும் ஏற்படாததால், உடனடியாக பால், ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரத்தியஷ்ன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தியை கல்கத்தா கிரிக்கெட் அகாடமி செயலாளர் அப்துல் மசூத் தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP