உலகில் சிறந்த கூட்டணி: குல்திப், சாஹலை பாராட்டிய விராட் கோலி

இந்திய அணியின் வெற்றி சுழற்பந்து கூட்டணியாக திகழ்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு மாற்றாக தற்போது இருக்கும் குல்திப் யாதவும், சாஹலும் பலமான சுழற்பந்து கூட்டணி என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரோட் கோலி புகழ்ந்துள்ளார்.
 | 

உலகில் சிறந்த கூட்டணி: குல்திப், சாஹலை பாராட்டிய விராட் கோலி

குல்திப் யாதவும், சாஹலும் பலமான சுழற்பந்து கூட்டணி என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரோட் கோலி புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி சுழற்பந்து கூட்டணியாக திகழ்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு மாற்றாக தற்போது குல்திப் யாதவ் மற்றும் சாஹல் இருக்கின்றனர்.  குறிப்பாக மிடில் ஓவர்களில் இந்த சுழற்பந்து இணை எதிரணியை பந்தாடி வருகிறது. 

இந்நிலையில் இவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார். அவர் இவர்கள் குறித்து பேசும்போது, "தற்போதைய நிலையில் உலகளவில் குல்திப்பும், சாஹலும் தான் சிறந்த சுழற்பந்து கூட்டணியாக திகழ்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இவர்கள் இருவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மிடில் ஓவர்களில் இவர்கள் விக்கெட் எடுக்கும் விததும், ரன்களை கட்டுப்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானவை" என கூறினார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP