உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம் இன்று வெளியாகியுள்ளது.
 | 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம் இன்று வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், வருகிற மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

முதலில் இந்த 10 அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் லீக் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து, முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும். அதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஜூலை 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டித் தொடருக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம்: 

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக். 

இதில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் இருவரும் தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP