மகளிர் டி20: அதிவிரைவான அரைசதமடித்து ஸ்மிரிதி மந்தனா சாதனை

மகளிர் டி20 போட்டியில் அதிவிரைவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் ஸ்மிரிதி மந்தனா.
 | 

மகளிர் டி20: அதிவிரைவான அரைசதமடித்து ஸ்மிரிதி மந்தனா சாதனை

மகளிர் டி20 போட்டியில் அதிவிரைவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் ஸ்மிரிதி மந்தனா. 

இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான கியா சூப்பர் லீக் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று வரும் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீராங்கனை மந்தனா ஆவார். 

தொடரில் லூக்ஹ்போரூக்ஹ் லைட்னிங் அணியுடன் நடந்த போட்டியில், மந்தனா 18 பந்துகளில் அரைசதம் கடந்து, 2015ல் நியூசிலாந்தின் சோஃபி டேவின் நிகழ்த்திய சாதனையை சமன் செய்தார். மேலும், கியா சூப்பர் லீகில், இதுவே அதிவிரைவாக அரைசதமாகும்.

மந்தனா, 19 பந்துகளில் 52 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

இதுவரை 42 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள மந்தனா 857 ரன் (5 அரைசதம்) அடித்துள்ளார். 41 ஒருநாள் போட்டிகளில் 1464 ரன் அடித்திருக்கிறார். 

ஆடவர் டி20 கிரிக்கெட்டில், யுவ்ராஜ் சிங், அதிவிரைவாக டி20 அரைசதம் அடித்த சாதனையை கிறிஸ் கெய்லுடன் படைத்துள்ளார். இருவரும் 12 பந்துகளில் அந்த சாதனையை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP