சி.எஸ்.கே.,வுக்கு சவால் விடுமா மும்பை இந்தியன்ஸ்?

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் பாேட்டிக்கு நிகரான பரபரப்பு இந்த இரு அணிகள் மோதும் போதும் காணப்படும் என்பது தான், இரு அணிகளுக்கு இடையான போட்டியின் தனிச் சிறப்பு.
 | 

சி.எஸ்.கே.,வுக்கு சவால் விடுமா மும்பை இந்தியன்ஸ்?

- வி.இராமசுந்தரம் -

இன்று நடைபெறவுள்ள, ஐ.பி.எல்., போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மாேதவுள்ளன. பல வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

11 ஆண்டு கால ஐ.பி.எல்., தொடர் வரலாற்றில், இந்த  இரு அணிகளும் முக்கியத்துவம் வாய்ந்த, ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக திகழ்ந்து வருகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மாேதிய, 26 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி, 14 போட்டிகளில் வென்றுள்ளது. 

எனினும், சி.எஸ்.கே., அணிக்கே ரசிகர் பட்டாளம் அதிகம். பிற அணிகளை துவம்சம் செய்வதிலும், கடைசி நேரம் வரை விறுவிறுப்பு கூட்டி, கடைசியில் வெற்றி வாகை சூட்டுவதிலும், சி.எஸ்.கே.,வுக்கு நிகர், சி.எஸ்.கே., தான். 

இந்த ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரை, மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம். அவர்கள் ஆடிய, மூன்று போட்டிகளில், இரண்டில் தோல்வியை தழுவியுள்ளனர். 

அந்த அணியின் பேட்டிங் வரிசை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மள மளவென விக்கெகட்டுகளை இழக்கும் அந்த அணி, கடந்த மூன்று போட்டிகளில், 25 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அணியில் குறிப்பிட்ட சில வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அணியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை துணிவுடன் எதிர்கொள்ள முடியும். 

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனும், அணி நிர்வாகமும் அதற்கான பணியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இன்றைய போட்டியில், வீரர்கள் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணியை பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது எப்போதும் சவாலான விஷயமாகவே இருந்து வந்துள்ளது. எனவே அவர்களை எதிர்காெள்ளும் வகையில், இங்கும் முக்கிய வீரர்கள் சிலர் அணிக்குள் வரலாம். 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் பாேட்டிக்கு நிகரான பரபரப்பு இந்த இரு அணிகள் மோதும் போதும் காணப்படும் என்பது தான், இரு அணிகளுக்கு இடையான போட்டியின் தனிச் சிறப்பு. 

பார்க்கலாம்... இரு சிங்கக் கூட்டங்களில் சூறாவளி ஆட்டத்தை... 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP