1. Home
  2. விளையாட்டு

மிதாலியை அணியில் இருந்து நீக்கியது ஏன்: பயிற்சியாளர் விளக்கம்

மிதாலியை அணியில் இருந்து நீக்கியது ஏன்: பயிற்சியாளர் விளக்கம்

தொடக்க வீராங்கனையாக களமிறங்கவில்லை என்றால் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மிரட்டியதாக மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் இருந்து சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், இதனால் மனம் உடைந்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதுகுறித்து பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம்ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரையிறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை. அவர் தொடக்க வீராங்கனையாக விளையாடவில்லை என்றால் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்று பவார் கூறியுள்ளார்.

மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார்

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like