தோனியும், தவானும் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை: கவாஸ்கர் கேள்வி

சர்வதேச போட்டிகளில் தோனியும், தவானும் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

தோனியும், தவானும் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை: கவாஸ்கர் கேள்வி

சர்வதேச போட்டிகளில் தோனியும், ஷிக்கர் தவானும் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.

இதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.

உங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு ஃபார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP