இந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 | 

இந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: விராட் கோலி

இங்கிலாந்து உடனான இன்றைய 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வரும் இரண்டு டெஸ்ட்  போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், இன்றைய இந்திய அணியின் வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP