வாட்சன் அதிரடி: சென்னை அணி சூப்பர் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், வாட்சன் அதிரடியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.
 | 

வாட்சன் அதிரடி: சென்னை அணி சூப்பர் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், வாட்சன் அதிரடியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபத் அணி, 175 ரன்கள் எடுத்தது. 176 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். 

அந்த அணியின் வாட்சன், 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிக வேகமாக இலக்கை துரத்திய சென்னை வீரர்கள், 19.5 ஓவர்களில் 4  விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தனர். இதையடுத்து, அந்த அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP