சத்தமே இல்லாமல் இரண்டு சாதனைகளை படைத்த விராட் கோலி

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களையும் கடந்தும், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவையும் முந்தியுள்ளார்.
 | 

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியுற்றாலும், அருமையாக விளையாடிய கோலி சத்தமே இல்லாமல் இரண்டு சாதனைகளை செய்துள்ளார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில்  8 ஆயிரம் ரன்களை கோலி கடந்துள்ளார்.

இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 7-ஆவது வீரர் மற்றும் இந்தியளவில் 2-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்ற கோலி, 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடி 8,067 ரன்கள் அடித்துள்ளார். அதில் 4 சதங்கள் அடங்கும். 8 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்களில் ரெய்னா முதலிடத்தில் (8,110 ரன்) உள்ளார். உலகளவில் கிறிஸ் கெயில் 12,457 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மற்றொரு சாதனையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக (5,086) ரன்களை குவித்த ரெய்னாவை கோலி முந்தியுள்ளார். கோலி 5,110 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP