உலகக்கோப்பையை ஜெயித்ததற்கு இணையானது அந்த வெற்றி : விராட் கோலி பெருமிதம்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 30 - ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேட்பன் விராட் கோலி, விளையாட்டுகள் தொடர்பான செய்திகளை வழங்கும் பிரபல இணையதள நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார்.
 | 

உலகக்கோப்பையை ஜெயித்ததற்கு இணையானது அந்த வெற்றி : விராட் கோலி பெருமிதம்!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, 2011 -இல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்கு சமமானது என, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 30 - ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேட்பன் விராட் கோலி,  விளையாட்டுகள் தொடர்பான செய்திகளை வழங்கும் பிரபல இணையதள நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம், "தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011 -இல் உலகக் கோப்பையை கைப்பற்றியது.... ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது... கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு வெற்றிகளில், எதை சிறந்ததாக கருதுவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விராட் கோலி அளித்த பதில்:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது ஒவ்வொரு அணிக்கு மிக முக்கியமானது. உலக அளவிலான இந்தப் போட்டியையும், அதற்கான முக்கியத்துவத்தையும் வேறெந்த போட்டியுடனும் ஒப்பிட முடியாது. இதேபோன்று, உலகக் கோப்பையை கைப்பற்றிய ஒரு அணியின் வெற்றியை, அந்த அணி பெற்றுள்ள வேறெந்த வெற்றியுடன் ஒப்பிடக் கூடாது தான். 

உலகக்கோப்பையை ஜெயித்ததற்கு இணையானது அந்த வெற்றி : விராட் கோலி பெருமிதம்!

அதேசமயம், ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்றி நாம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளோம். இதுவும் மகாத்தான வெற்றி தான். எனவே, இந்திய அணி 2011 -இல் உலகக் கோப்பையை வென்றதற்கு இணையாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை கருதுகிறேன்.  இரண்டு வெற்றிகளும் எனக்கு சமம் தான் என்று கோலி பதிலளித்தார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த டிசம்பர், ஜனவரி மாதம்  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியதே இல்லை என்ற 71 ஆண்டுகால குறை தீர்க்கப்பட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது  குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP